Song 169
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதனதனதான
Lyrics
தோகைமயி லேகமல மானேயு லாசமிகுகாமதுரை யானமத வேள்பூவை யேயினிமைதோயுமநு போகசுக லீலாவி நோதமுழுதுணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலைமீதணைய வாருமிதழ் தாணரெ னாணைமொழிசோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிகமயலானேன்
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடையாளமிட வாருமென வேமாத ரார்களுடனாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலியுனையோதேன்
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகிலனீறுநுதல் மீதிடலி லர்முட னேதுமிலியாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள்தருவாயே
மாகமுக டோ டகில பாதாள மேருவுடனேசுழல வாரியது வேதாழி யாவமரர்வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுதுகடைநாளில்
வாருமென வேயொருவர் நோகாம லாலவிடமீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்வாழஅமு தேபகிரு மாமாய னாரினியமருகோனே
மேகநிக ரானகொடை மானாய காதிபதிவாரிகலி மாருதக ரோபாரி மாமதனவேள்கலிசை வாழவரு காவேரி சேவகனதுளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருததீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனிவீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர்பெருமாளே.
