Song 155
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
- Sthalam
- பழநி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தனதனதான
Lyrics
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரிசெங்கைகு லாவந டித்துத் தென்புறசெண்பக் மாலைமு டித்துப் பண்புளதெருவூடே
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கயலம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறிவிலைமாதர்
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையையன்பூற மூடிநெ கிழ்த்திக் கண்படமஞ்சணி ராடி னுக்கிப் பஞ்சணைதனிலேறி
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிடமுன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்மங்கைய ராசைவி லக்கிப் பொன்பதமருள்வாயே
இந்திர நீலவ னத்திற் செம்புவியண்டக டாகம ளித்திட் டண்டர்களெண்படு சூரைய ழித்துக் கொண்டருளொருபேடி
இன்கன தேரைந டத்திச் செங்குருமண்டல நாடும ளித்துப் பஞ்சவரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திருமருகோனே
சந்திர சூரியர் திக்கெட் டும்புகழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கியசங்கர னார்செவி புக்கப் பண்பருள்குருநாதா
சம்ப்ரப மானகு றத்திக் கின்புறுகொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தரதண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கியபெருமாளே.
