Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 154

சகடத்திற் குழையிட் டெற்றிக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத்தத் தனனத் தத்தத்தனனத்தத் தனனத் தத்தத்தனதான

Lyrics

சகடத்திற் குழையிட் டெற்றிக்குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்புளகித்துக் குவளைக் கட்பொற்கணையொத்திட் டுழலச் சுத்தித்தரளப்பற் பவளத் தொட்டக்களபப்பொட் டுதலிட் டத்திக்குவடான

தனதுத்திப் படிகப் பொற்பிற்டசையப்பெட் பசளைத் துப்புக்கொடியொத்திட் டிடையிற் பட்டைத்தகையிற்றொட் டுகளப் பச்சைச்சரணத்துக் கியலச் சுற்றிச்சுழலிட்டுக் கடனைப் பற்றிக்கொளுமாதர்

சுகமுற்றுக் கவலைப் பட்டுப்பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்பிணியுற்றுக் கசதிப் பட்டுச்சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக்கிடைநாளிற்

சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்கொளுகப்பற் பலரைக் கட்டிக்கரம்வைத்துத் தலையிற் குத்திச்சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச்சடமாமோ

திகுடத்திக் குகுடட் டுட்டுட்டமடட்டட் டமடட் டிக்குட்டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்செகணக்கச் செகணச் செக்குத்தகுடத்தத் தகுடத் தட்டுட்டிடிபேரி

திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்பகடிட்டுப் பறையொத் தக்கட்டிகையெட்டுக் கடல்வற் றித்தித்தரவுக்கக் கிரியெட் டுத்தைத்தியருக்குச் சிரமிற் றுட்கச்சுரர் பொற்புச் சொரியக் கைத்தொட்டிடும்வேலா

பகலைப்பற் சொரியத் தக்கற்பதிபுக்கட் டழலிட் டுத்திட்புரமட்கிக் கழைவிற் புட்பச்சரனைச்சுட் டயனைக் கொத்திப்பவுரிக்கொட் பரமர்க் குச்சற்குருவொத்துப் பொருளைக் கற்பித்தருள்வோனே

பவளப்பொற் கிரிதுத் திப்பொற்றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்பரிவுற்றுக் கமலப் புட்பத்திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்படிகத்துப் பவளப் பச்சைப்பதமுத்துப் பழநிச் சொக்கப்பெருமாளே.

All songs →