Song 1292
தேனியல்சொற் ...... கணிமாதர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதனத்தனதான
Lyrics
தேனியல்சொற்கணிமாதர்
சேவைதனைக்கருதாதே
யானெனதற்றிடுபோதம்
யானறிதற்கருள்வாயே
வானவருக்கரசான
வாசவனுக்கினியோனே
ஆனைமுகற்கிளையோனே
ஆறுமுகப்பெருமாளே.
