Song 1291
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஹம்ஸாநந்தி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3தய்யதன தானத்தனதான
Lyrics
துள்ளுமத வேள்கைக்கணையாலே
தொல்லைநெடு நீலக்கடலாலே
மெள்ளவரு சோலைக்குயிலாலே
மெய்யுருகு மானைத்தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத்தெளிவோனே
செய்யகும ரேசத்திறலோனே
வள்ளல்தொழு ஞானக்கழலோனே
வள்ளிமண வாளப்பெருமாளே.
