Song 1285
கொடியமத வேள்கைக் ...... கணையாலே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- வாசஸ்பதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தனதனன தானத்தனதான
Lyrics
கொடியமத வேள்கைக்கணையாலே
குரைகணெடு நீலக்கடலாலே
நெடியபுகழ் சோலைக்குயிலாலே
நிலைமைகெடு மானைத்தழுவாயே
கடியரவு பூணர்க்கினியோனே
கலைகள்தெரிமாமெய்ப்புலவோனே
அடியவர்கள் நேசத்துறைவேலா
அறுமுகவி நோதப்பெருமாளே.
