Song 1284
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஆரபி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சங்கீர்ண த்ருபுடை /9 0 0(எடுப்பு - 1 அக்ஷரம் தள்ளி)தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்ததனதான
Lyrics
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்துமறுகாதே
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்களுரையாதே
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்கருதுநீயே
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கிமகிழ்வோனே
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்சமரவேளே
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்தமயிலோனே
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்புமிசையோனே
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்தபெருமாளே.
