Song 1281
இத்தரணி மீதிற் ...... பிறவாதே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- அஸாவேரி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி(எடுப்பு - 3/4 இடம்)தத்ததன தானத்தனதான
Lyrics
இத்தரணி மீதிற்பிறவாதே
எத்தரொடு கூடிக்கலவாதே
முத்தமிழை யோதித்தளராதே
முத்தியடி யேனுக்கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா
சத்தசொரு பாபுத்தமுதோனே
நித்தியக்ரு தாநற்பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப்பெருமாளே.
