Song 127
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதனன தனன தனதனனதனன தனதனனதனதான
Lyrics
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்கடின குடவுதரவிபாணத
கரட தடமுமத நளின சிறுநயனகரிணி முகவரதுதுணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்வலம்வரு மரகதமயில்வீரா
மகபதி தருசுதை குறமினொ டிருவருமருவு சரசவிதமணவாளா
அடல சுரர்கள்குல முழுது மடியவுயரமரர் சிறையைவிடஎழில்மீறும்
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடுமரகர சரவணபவலோலா
படல வுடுபதியை யிதழி யணிசடிலபசுபதி வரநதிஅழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலைபழநி மலையில்வருபெருமாளே.
