Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 126

கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனதான

Lyrics

கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்கமலத் தைமலர்த் திவிடத் தையிரப்பவனு஡ணாக்

கருதிச் சருவிக் கயலைக் கயமுட்படுவித் துழையைக் கவனத் தடைசிக்கணையைக் கடைவித் துவடுத் தனையுப்பினின்மேவி

அடலைச் செயல்சத் தியையக் கினியிற்புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித்தசகோரம்

அலறப் பணிரத் நமணிக் குழையைச்சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட்டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற்படுவேனோ

சடிலத் தவனிட் டவிசிட் டகுலத்தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித்தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப்பரிவாலே

சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற்குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச்சதுபத் துநவப் புலவர்க் கும்விபத்தியில்ஞான

படலத் துறுலக் கணலக் யதமிழ்த்த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற்குருநாதா

பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற்றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப்பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப்பெருமாளே.

All songs →