Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1249

திரைவஞ்ச இருவினைகள் நரையங் கமலமழிய

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - கண்டசாபு (2 1/2)தனதந்த தனதனன தனதந்த தனதனனதனதந்த தனதனனதனதான

Lyrics

திரைவஞ்ச இருவினைகள் நரையங் கமலமழியசிவகங்கை தனில்முழுகிவிளையாடிச்

சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமெனதிகழண்டர் முநிவர்கணமயன்மாலும்

அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழஅடியென்க ணளிபரவமயிலேறி

அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவிஅருமந்த பொருளையினியருள்வாயே

பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதிபரிதுஞ்ச வருமதுரைநடராஜன்

பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவபவளஞ்சொ லுமைகொழுநனருள்பாலா

இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையுமெரியுண்டு பொடியஅயில்விடுவோனே

எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொடெணுபஞ்ச ணையின்மருவுபெருமாளே.

All songs →