Song 1248
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்தனதன தாத்தனத்தனதான
Lyrics
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்த்ரிவிதக டாக்களிற்றுரகோடு
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்சுரர்குடி யேற்றிவிட்டிளநீரை
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்செப்பிணமுலை மாத்தவக்கொடிபோல்வார்
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்றெனையுனை வாழ்த்தவைத்தருள்வாயே
சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்கெரிகன லேற்றவற்குணராதோர்
சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்கியபர மார்த்தமுற்புகல்வோனே
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்கலகப ராக்ரமக்கதிர்வேலா
கருதிய பாட்டினிற் றலைதெரிமாக்ஷணக்கவிஞரு சாத்துணைப்பெருமாளே.
