Song 1243
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- வாசஸ்பதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - கண்டசாபு (2 1/2)தகிட-1 1/2, தக-1தானதன தானதன தானதன தானதனதானதன தானதனதனதான
Lyrics
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதெனதூசுவழ கானவடிவதனாலே
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொருளாசைதமி லேசுழலவருகாலன்
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியெனதாவிதனை யேகுருகிவருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவுமாதிமுரு காநினைவுதருவாயே
ஓதமுகி லாடுகிரியேறுபட வாழசுரர்ஓலமிட வேயயில்கொடமராடீ
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்யோகமயி லாஅமலைமகிழ்பாலா
நாதரகு ராமஅரிமாயன்மரு காபுவனநாடுமடி யார்கள்மனதுறைவோனே
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்நாடுபெற வாழவருள்பெருமாளே.
