Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1234

கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்ததந்ததன தத்த தத்ததனதான

Lyrics

கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்தகெண்டையள்பு னக்கொ டிச்சியதிபாரக்

கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்திகிங்கரனெ னப்ப டைத்தபெயர்பேசா

நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்நிந்தனையில் பத்தர் வெட்சிமலர்தூவும்

நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்கநின்பணித மிழ்த்ர யத்தையருள்வாயே

கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்தகங்கனும தித்தி கைக்கமதம்வீசுங்

கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்டகம்பனும திக்க வுக்ரவடிவேல்கொண்

டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்துஅன்பர்புக ழப்பொ ருப்பொடமராடி

அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கிஅண்டர்சிறை வெட்டி விட்டபெருமாளே.

All songs →