Song 1229
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தன தத்தன தத்தன தத்தனதத்தன தத்தனதனதான
Lyrics
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்கட்பயி லிட்டிளவளவோரைக்
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமுகத்தைமி னுக்கிவருமுபாயப்
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்பற்றென வுற்றவொர்தமியேனைப்
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரைபட்டதெ னக்கினியமையாதோ
குப்பர வப்படு பட்சமி குத்துளமுத்தரை யர்க்கொருமகவாகிக்
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்குற்றம றுத்திடுமுதல்வோனே
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவிசித்ரத னக்கிரிமிசைதோயும்
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழுவெற்பைநெ ருக்கியபெருமாளே.
