Song 1228
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தானன தந்த தானனதந்த தானனதனதான
Lyrics
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்கண்கள் சேல்மதிமுகம்வேய்தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களிலொண்டு காதலிலிருகோடு
மண்டி மார்பினில் விண்ட தாமெனவந்த கூர்முலைமடவார்தம்
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடிகின்ற மாயமதொழியாதோ
கொண்ட லார்குழல் கெண்டை போல்விழிகொண்டு கோகிலமொழிகூறுங்
கொங்கை யாள்குற மங்கை வாழ்தருகுன்றில் மால்கொடுசெலும்வேலா
வெண்டி மாமன மண்டு சூர்கடல்வெம்ப மேதினிதனில்மீளா
வென்று யாயையு மன்றி வேளையும்வென்று மேவியபெருமாளே.
