Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1179

புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - சருஸ்ர ரூபகம் (6)தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதனதனத்தந் தான தனதனதனதான

Lyrics

புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனைபுலக்கண் கூடு மதுதனைஅறியாதே

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரைபுழுக்கண் பாவ மதுகொளல்பிழையாதே

கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலிகளைக்கும் பாவ சுழல்படுமடிநாயேன்

கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடைகணக்குண் டாதல் திருவுளமறியாதோ

சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெசிறக்குஞ் சாமி சொருபமிதொளிகாணச்

செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதைதெறிக்குஞ் சாமி முனிவர்களிடமேவுந்

தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலைதரிக்குஞ் சாமி யசுரர்கள்பொடியாகச்

சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவணதகப்பன் சாமி யெனவருபெருமாளே.

All songs →