Song 1178
புருவத்தை நெறித்து விழிக்கயல்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனத்த தனத்த தனத்தனதனனத்த தனத்த தனத்தனதனனத்த தனத்த தனத்தனதனதான
Lyrics
புருவத்தை நெறித்து விழிக்கயல்பயிலிட்டு வெருட்டி மதித்திருபுதுவட்டை மினுக்கி யளிக்குலமிசைபாடும்
புயல்சற்று விரித்து நிரைத்தொளிவளையிட்ட கரத்தை யசைத்தகில்புனைமெத்தை படுத்த பளிக்கறைதனிலேறிச்
சரசத்தை விளைத்து முலைக்கிரிபுளகிக்க அணைத்து நகக்குறிதனைவைத்து முகத்தை முகத்துடனுறமேவித்
தணிவித்தி ரதத்த தரத்துமிழமுதத்தை யளித்து வுருக்கிகள்தருபித்தை யகற்றி யுனைத்தொழமுயல்வேனோ
பரதத்தை யடக்கி நடிப்பவர்த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்பரவைக்குள் விடத்தை மிடற்றிடுபவர்தேர்கப்
பரையுற்ற கரத்தர் மிகப்பகிரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்பரவத்தர் பொருப்பி லிருப்பவருமையாளர்
சுரர் சுத்தர் மனத்துறை வித்தகர்பணிபத்தர் பவத்தை யறுப்பவர்சுடலைப்பொடி யைப்பரிசிப்பவர்விடையேறுந்
துணையொத்த பதத்த ரெதிர்த்திடுமதனைக்கடி முத்தர் கருத்தமர்தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள்பெருமாளே.
