Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1173

பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தந்ததன தானத் தாத்தனதனதனன தந்ததன தானத் தாத்தனதனதனன தந்ததன தானத் தாத்தனதனதான

Lyrics

பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோ ட்டிகள்கொடிதாய

பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறிதழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர்ஒருகாம

விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெவிபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றியதமிழ்நூலின்

விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்முலைகளில்வி ழுந்துபரிதாபத் தாற்றினில்விடியளவு நைந்துருகு வேனைக் காப்பதுமொருநாளே

உ ரகபணை பந்தியபி ஷேகத் தாற்றியசகலவுல குந்தரும மோகப் பார்ப்பதியுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும்உ றிதாவும்

ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குலமகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்ந்திடும்உ ரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனுமதிகோபக்

கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரிகடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகைகருமமென வந்துதொழ வேதப் பாற்பதிபிறியாத

கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்கரவடக்ர வுஞ்சகிரிசாயத் தோற்றெழுகடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கியபெருமாளே.

All songs →