Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1166

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனதன தத்த தந்த தானத்ததனதன தத்த தந்த தானத்ததனதன தத்த தந்த தானத்ததனதான

Lyrics

நரையொடு பற்க ழன்று தோல்வற்றிநடையற மெத்த நொந்து காலெய்த்துநயனமி ருட்டி நின்று கோலுற்றுநடைதோயா

நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்துநமதென மெத்த வந்த வாழ்வுற்றுநடலைப டுத்து மிந்த மாயத்தைநகையாதே

விரையொடு பற்றி வண்டு பாடுற்றம்ருகமத மப்பி வந்த வோதிக்குமிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும்வினையோடு

மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்குமிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்விழுமிய பொற்ப தங்கள் பாடற்குவினவாதோ

உ ரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்குமொளிபெற நற்ப தங்கள் போதித்துமொருபுடை பச்சை நங்கை யோடுற்றுமுலகூடே

உ றுபலி பிச்சை கொண்டு போயுற்றுமுவரிவி டத்தை யுண்டு சாதித்துமுலவிய முப்பு ரங்கள் வேவித்துமுறநாகம்

அரையொடு கட்டி யந்த மாய்வைத்துமவிர்சடை வைத்த கங்கை யோடொக்கஅழகுதி ருத்தி யிந்து மேல்வைத்துமரவோடே

அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்தஅரியய னித்தம் வந்து பூசிக்கும்அரநிம லர்க்கு நன்றி போதித்தபெருமாளே.

All songs →