Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1156

சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்ததந்தனந் தனந்த தந்ததனதான

Lyrics

சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கைசந்திரந் ததும்ப சைந்துதெருவூடே

சங்கினங் குலங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்புசந்தனந் துவண்ட சைந்துவருமாபோல்

கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங்க இன்சு கங்கள்கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன்மடவார்தோள்

கொங்கைபைங் கரம் புணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்துகொஞ்சுநின் சரண்க ளண்டஅருள்தாராய்

தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்சதண்டையம்ப தம்பு லம்பவருவோனே

சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்கசண்பகம் புனங்கு றம்பொன்அணைமார்பா

வந்தநஞ் சுகந் தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சிமந்தரம் பொதிந்த கொங்கையுமையீனும்

மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர்மங்கலின் றுளம்பு குந்தபெருமாளே.

All songs →