Song 1155
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானனா தனன தத்த, தானனா தனன தத்ததானனா தனன தத்ததனதான
Lyrics
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்கோதுசே ரிழிகு லத்தர்குலமேன்மை
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ரகோவுநா னென இசைப்பர்மிடியூடே
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்ஆசுசேர் கலியு கத்தினெறியீதே
ஆயுநூ லறிவு கெட்ட நானும் வேறல அதற்குளாகையா லவைய டக்கவுரையீதே
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ரஈசன்மேல் வெயிலெ றிக்கமதிவேணி
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்ஏறியே யினிதி ருக்கவருவோனே
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்துவேதனா ரையும் விடுத்துமுடிசூடி
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்தவீறுசேர் சிலை யெடுத்தபெருமாளே.
