Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1141

உ றவு சிங்கிகள் காமா காரிகள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தந்தன தானா தானனதனன தந்தன தானா தானனதனன தந்தன தானா தானனதனதான

Lyrics

உ றவு சிங்கிகள் காமா காரிகள்முறைம சங்கிக ளாசா வேசிகள்உ தடு கன்றிகள் நாணா வீணிகள்நகரேகை

உ டைய கொங்கையின் மீதே தூசிகள்பிணமே னும்படி பேய்நீ ராகியஉ ணவை யுண்டுடை சோர்கோ மாளிகள்கடல்ஞாலத்

தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்அணிநெ ருங்கிக ளாசா பாஷணமடமாதர்

அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்கலவி யின்பமெ னாவே சோருதல்அலம லந்தடு மாறா தோர்கதியருள்வாயே

பறவை யென்கிற கூடார் மூவரண்முறையி டுந்தமர் வானோர் தேரரிபகழி குன்றவி லாலே நீறெழவொ முவர்

பதநி னைந்துவி டாதே தாள் பெறஅருள்பு ரிந்தபி ரானார் மாபதிபரவு கந்தசு வாமீ கானகமதின்மேவுங்

குறவர் தங்கள்பி ரானே மாமரம்நெறுநெ றென்றடி வேரோ டேநிலைகுலைய வென்றிகொள் வேலே யேவியபுயவீரா

குயில்க ளன்றில்கள் கூகூ கூவெனமலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசைகுறவர் சுந்தரியோடே கூடியபெருமாளே.

All songs →