Song 1140
நடை - தகதகிட
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- வலஜி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)(எடுப்பு - /4/4/4 0)
Lyrics
நடை - தகதகிட
தனதனன தனதனன தானான தானதனதனதனன தனதனன தானான தானதனதனதனன தனதனன தானான தானதனதந்ததான
உ றவின்முறை கதறியழ ஊராரு மாசையறபறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுறஉ லகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியுமந்தநாளில்
உ னதுமுக கருணைமல ரோராறு மாறிருகைதிரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்உ பயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும்அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரியேசொரியமதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிரமயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர்வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருதுவிருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்துமதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன்வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழஅதிரஎழு புவியுலக மீரேழு மோலமிடபிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில்நின்றநாகம்
பிரியநெடு மலையிடிய மாவாரிதூளியெழபெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடுபிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செயவென்றதீரா
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருடகரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகுகுளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர்குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடையவொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள்தம்பிரானே.
