Song 1122
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போதப்பே சிப்பொற்கனிவாயின்
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூணைப்பூண் வெற்பிற்றுகில்சாயக்
கற்பா லெக்கா வுட்கோ லிக்காசுக்கே கைக்குத்திடுமாதர்
கட்கே பட்டே நெட்டா சைப்பாடுற்றே கட்டப்படுவேனோ
சொற்கோ லத்தே நற்கா லைச்சேவிப்பார் சித்தத்துறைவோனே
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்விக்கா முக்கத்தொடும்வேலா
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்முத்தாள் முத்தச்சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
