Song 1121
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கேபொய்ப்போ கத்தைப்பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போகித்தே கைக்குப்பொருள்தேடித்
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்திக்கோ டிப்பச்சிமமான
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீவுக்கோ டிக்கெட்டிடலாமோ
தற்கோ லிப்பா விப்பார் நற்சீரைச்சா ரத்தற்பரமானாய்
தப்பா முப்பா லைத்தே டித்தேசத்தோர் நிற்கத்தகையோடே
முற்கா னப்பே தைக்கா கப்போய்முற்பால் வெற்பிற்கணியானாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
