Song 1100
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்தந்தனந் தந்தனந்தனதான
Lyrics
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்சன்பிலன் துன்பவன்புகழ்வாரா
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்தங்குமிங் குந்திரிந்திரைதேடுஞ்
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்சஞ்சலன் கிஞ்சுகந்தருவாயார்
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்தண்டையம் பங்கயம்புகழ்வேனோ
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்கங்களுங் திங்களுங்கழுநீருங்
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்கந்தமுந் துன்றுசெஞ்சடையாளர்
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்பந்தவெங் குண்டர்தங்குலகாலா
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்பண்புநண் பும்பெறும்பெருமாளே.
