Song 1099
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தானதத்த தனதனன தானதத்ததனதனன தானதத்ததனதான
Lyrics
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்துமதசுகப்ர தாபசித்ரமுலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தைமனமகிழ் வேயளித்துமறவாதே
உ டலுயிர தாயிருக்க உ னதெனதெ னாமறிக்கைஒருபொழுதொ ணாதுசற்றுமெனவேதான்
உ ரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தையொழியவொரு போதகத்தையருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்மசரணயுக மாயனுக்குமருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசக்ரசயிலம்வல மாய்நடத்துமயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்அறுமுகவ ஞானதத்வநெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்டஅமரர்சிறை மீளவிட்டபெருமாளே.
