Song 1051
நிலவில் மார னேறுதை யசைய வீசு மாராம
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
நிலவில் மார னேறுதை யசைய வீசு மாராமநிழலில் மாட மாமாளிகையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடுநியதி யாக வாயாரவயிறார
இலவி லுறு தேனூறல் பருகி யார வாமீறியிளகி யேறு பாடீரதனபாரம்
எனது மார்பி ல்முழ்க இறுக மேவி மால்கூருகினுமு னீப சீர்பாதமறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்குழைய மாலி காநாகமொடுதாவிக்
குடில கோம ளாகார சடில மோலி மீதேறுகுமர வேட மாதோடுபிரியாது
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்கடக வாரிதூளாகஅமராடுங்
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீரகருணை மேரு வேதேவர்பெருமாளே.
