Song 1045
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- யமுனா கல்யாணி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூலஅமுத பான ம்முலஅனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாதுஅரிச தான சோபானமதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவமெளிது சால மேலாகவுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்இதய பாவ னாதீதமருள்வாயே
விமலை தோடி மீதொடு யமுனை போல வோரேழுவிபுத மேக மேபோலவுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோலவெகுவி தாமு காகாயபதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடுகலப நீல மாயூரஇளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரியேயீறில்கருணை மேரு வேதேவர்பெருமாளே.
