Song 1027
தோதகமி குத்த பூதமருள் பக்க
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
தோதகமி குத்த பூதமருள் பக்கசூலைவலி வெப்புமதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்றுசோகைபல குட்டமவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்றுமாயபணி சற்றுமணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்வாழமிக வைத்துஅருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்தகானககு றத்திமணவாளா
காசினிய னைத்து மோடியள விட்டகால்நெடிய பச்சைமயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்வேதனைத விர்க்குமுருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டிமீளவிடு வித்தபெருமாளே.
