Song 1026
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்றதோர்தனம சைத்துஇளைஞோர்தம்
தோள்வலி மனத்து வாள்வலி யுழக்குதோகையர் மயக்கிலுழலாதே
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தியோடுநினை பத்தர்பெருவாழ்வே
பாவவினை யற்று னாமநினை புத்திபாரிலருள் கைக்குவரவேணும்
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றிஆண்மையுட னிற்குமுருகோனே
ஆதியர னுக்கு வேதமொழி முற்றியார்வம்விளை வித்தஅறிவோனே
வேடைமய லுற்று வேடர்மக ளுக்குவேளையென நிற்கும்விறல்வீரா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டிமீளவிடு வித்தபெருமாளே.
