பாடல் 987
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தத் தத்தன தாத்த தத்தனதனத்தத் தத்தன தாத்த தத்தனதனத்தத் தத்தன தாத்த தத்தனதனதான
பாடல் வரிகள்
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படுமருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்வளைத்துச் சித்தச சாத்தி ரக்களவதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரைமருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்மதியாதே
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடுசிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பதுகரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொருபிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியையொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரைநெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்அழித்திட் டுக்குற வாட்டி பொற்றனகிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையிலுறைமாயன்
உ ழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்உ றிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன்மருகோனே
உ ரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறைபெருமாளே.
