பாடல் 975
ஏடுக்கொத் தாரலர் வார்குழ
- தலம்
- திருக்குற்றாலம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதனதான
பாடல் வரிகள்
ஏடுக்கொத் தாரலர் வார்குழலாடப்பட் டாடைநி லாவியஏதப்பொற் றோள்மிசை மூடியகரமாதர்
ஏதத்தைப் பேசுப ணாளிகள்வீசத்துக் காசைகொ டாடிகள்ஏறிட்டிட் டேணியை வீழ்விடுமுழுமாயர்
ம¨டொக்கக் கூடிய காமுகர்மூழ்குற்றுக் காயமொ டேவருவாயுப்புற் சூலைவி யாதிகளிவைமேலாய்
மாசுற்றுப் பாசம் விடாசமனூர்புக்குப் பாழ்நர கேவிழுமாயத்தைச் சீவியு னாதரவருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமிடூடுட்டுட் டூடுடு டாடமிதானத்தத் தானத னாவெனவெகுபேரி
தானொத்தப் பூதப சாசுகள்வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்சாகப்பொற் றோகையி லேறியசதிரோனே
கூடற்கச் சாலைசி ராமலைகாவைப்பொற் காழிவெ ளூர்திகழ்கோடைக்கச் சூர்கரு வூரிலுமுயர்வான
கோதிற்பத் தாரொடு மாதவசீலச்சித் தாதியர் சூழ்தருகோலக்குற் றாலமு லாவியபெருமாளே.
