பாடல் 962
முகமெ லாநெய் பூசித் தயங்கு
- தலம்
- மதுரை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானத் தனந்ததனன தான தானத் தனந்ததனன தான தானத் தனந்ததனதான
பாடல் வரிகள்
முகமெ லாநெய் பூசித் தயங்குநுதலின் மீதி லேபொட் டணிந்துமுருகு மாலை யோதிக் கணிந்தமடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்மிசையி லாவி யாய்நெக் கழிந்துமுடிய மாலி லேபட் டலைந்துபொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்துதிருட னாகி யேசற் றுழன்றுதிமிர னாகி யோடிப் பறந்துதிரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்துசிவபு ராண நூலிற் பயின்றுசெறியு மாறு தாளைப் பரிந்துதரவேணும்
அகர மாதி யாமக்ஷ ரங்களவனி கால்வி ணாரப் பொடங்கிஅடைய வேக ரூபத்தி லொன்றிமுதலாகி
அமரர் காண வேயத்த மன்றில்அரிவை பாட ஆடிக் கலந்தஅமல நாத னார்முற் பயந்தமுருகோனே
சகல வேத சாமுத்ரி யங்கள்சமய மாறு லோகத்ர யங்கள்தரும நீதி சேர்தத் துவங்கள்தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்ததமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்றுதவிர ஆல வாயிற் சிறந்தபெருமாளே.
