பாடல் 958
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
- தலம்
- மதுரை
- ராகம்
- தேவ மனோஹரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதிதனன தனந்தன தனன தனந்தனதனன தனந்தனதனதான
பாடல் வரிகள்
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பியபவனி வரும்படியதனாலே
பகர வளங்களு நிகர விளங்கியஇருளை விடிந்ததுநிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்ததுவரிசை தரும்பதமதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பருமகிழ வரங்களுமருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனிஅடியர் பணிந்திடமகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுதகுறமக ளிங்கிதமணவாளா
கருதரு திண்புய சரவண குங்குமகளபம ணிந்திடுமணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதியதனில் வளர்ந்தருள்பெருமாளே.
