உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 947

மதப்பட்டவி சாலக போலமு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தத்தன தானன தானனதனத்தத்தன தானன தானனதனத்தத்தன தானன தானன தந்ததான

பாடல் வரிகள்

மதப்பட்டவி சாலக போலமுமுகப்பிற்சன வாடையு மோடையுமருக்கற்புர லேபல லாடமுமஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியுமிதற்செக்கர்வி லோசன வேகமுமணிச்சத்தக டோரபு ரோசமுமொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியுநிறைக்கற்பக நீழலி லாறியும்விஷத்துர்க்கன சூளிகை மாளிகையிந்த்ரலோகம்

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தருபிரப்புத்வகு மாரசொ ரூபகவெளிப்பட்டெனை யாள்வய லு¡ரிலிருந்துவாழ்வே

இதப்பட்டிட வேகம லாலயவொருத்திக்கிசை வானபொ னாயிரமியற்றப்பதி தோறுமு லாவியதொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனையுளப்பெற்றொடு பாடிட வேடையிலிளைப்புக்கிட வார்மறை யோனெனவந்துகானிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினையவிழ்த்திட்டவி நாசியி லேவருதிசைக்குற்றச காயனு மாகிமறைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மகவழைப்பித்தபு ராணக்ரு பாகரதிருப்புக்கொளி யூருடை யார்புகழ்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →