பாடல் 919
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
- தலம்
- திருத்தவத்துறை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தத்தன தானன தானனதனத்த தத்தன தானன தானனதனத்த தத்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்பொருத்த வெற்பிணை மார்முலை மேலணிநெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதிமுகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை ய¨டையையுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்நிரப்பி நித்தமும் வீதியில் நேருறுநெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுனகழற்று தித்திடு வாழ்வது தான்மனதுறமேவிக்
கதித்த பத்திமை சாலடி யார்சபைமிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்கதிக்க டுத்துயர் வாகவு மேயருளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவினரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திருமணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதியவடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவருரைத்து ளத்திரு வாசக மானதுமனத்து ளெத்தழ கார்புகழ் வீசியமணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதிபெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலிசெழித்த நெற்செநெல் வாரிக ளேகுவைகுவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரிதிருத்த வத்துறை மாநகர் தானுறைபெருமாளே.
