பாடல் 91
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- செஞ்சுருட்டி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2)தந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தானதந்ததன தான தானத் தானதனதானா
பாடல் வரிகள்
முந்துதமிழ் மாலை கோடிக் கோடிசந்தமொடு நீடு பாடிப் பாடிமுஞ்சர்மனை வாசல் தேடித் தேடியுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போகமங்கையர்கள் காதல் தூரத் தேகமுந்தடிமை யேனை யாளத் தானுமுனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதிதந்ததன தான தானத் தானசெஞ்செணகு சேகு தாளத் தோடுநடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகைதுங்கஅநு கூல பார்வைத் தீரசெம்பொன்மயில் மீதி லேயெப் போதுவருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் காரசெந்தமிழ்சொல் பாவின் மாலைக் காரஅண்டருப கார சேவற் காரமுடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் காரஎழிலான
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் காரஎதிரான
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் காரசெந்தினகர் வாழு மாண்மைக் காரபெருமாளே.
