பாடல் 896
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
- தலம்
- அத்திக்கரை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடைசுற்றிக்கல னிட்டுக் கடிதருசொக்குப் புலியப்பிப் புகழுறுகளியாலே
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்சொற்றப்பிய கத்தைப் புரிபுலசுற்றத்துட னுற்றிப் புவியிடையலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலைகற்றுப்பிழை யற்றுத் தனையுணர்முத்தர்க்கடி மைப்பட் டிலகியஅறிவாலே
முத்தித்தவ சுற்றுக் கதியுறுசத்தைத்தெரி சித்துக் கரையகல்முத்திப்புண ரிக்குட் புகவரமருள்வாயே
திக்கெட்டும டக்கிக் கடவுளருக்குப்பணி கற்பித் தருளறுசித்தத்தொட டுத்துப் படைகொடுபொருசூரர்
செச்சைப்புய மற்றுப் புகவொருசத்திப்படை விட்டுச் சுரர்பதிசித்தத்துயர் கெட்டுப் பதிபெறஅருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்அச்சத்தையொ ழித்துக் கரிவரும்அத்தத்தி லழைத்துப் பரிவுடனணைவோனே
அப்பைப்பிறை யைக்கட் டியசடைஅத்தர்க்கரு மைப்புத் திரவிரிஅத்திக்கரை யிச்சித் துறைதருபெருமாளே.
