உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 89

மான்போற்கண் பார்வை பெற்றிடு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தனதனதான

பாடல் வரிகள்

மான்போற்கண் பார்வை பெற்றிடுமூஞ்சாற்பண் பாடு மக்களைவாய்ந்தாற்பொன் கோடு செப்பெனுமுலைமாதர்

வாங்காத்திண் டாடு சித்திரநீங்காச்சங் கேத முக்கியவாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடுமொழியாலே

ஏன்காற்பங் காக நற்புறுபூங்காற்கொங் காரு மெத்தையில்ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பணமுதல்நீதா

ஈந்தாற்கன் றோர மிப்பெனஆன்பாற்றென் போல செப்பிடும்ஈண்டாச்சம் போக மட்டிகளுறவாமோ

கான்பாற்சந் தாடு பொற்கிரிதூம்பாற்பைந் தோளி கட்கடைகாண்பாற்றுஞ் சாமல் நத்திடும்அசுரேசன்

காம்பேய்ப்பந் தாட விக்ரமவான்றோய்க்கெம் பீர விற்கணைகாண்டேர்க்கொண் டேவு மச்சுதன்மருகோனே

தீம்பாற்கும் பாகு சர்க்கரைகாம்பாற்செந் தேற லொத்துரைதீர்ந்தார்க்கங் காளி பெற்றருள்புதல்வோனே

தீண்பார்க்குன் போத முற்றுறமாண்டார்க்கொண் டோ து முக்கியதேன்போற்செந் தூரில் மொய்த்தருள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →