பாடல் 859
இலகு குழைகிழிய வூடு போயுலவி
- தலம்
- திருவிடைமருதூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதனன தான தானதனதனன தனதனன தான தானதனதனன தனதனன தான தானதனதந்ததான
பாடல் வரிகள்
இலகு குழைகிழிய வூடு போயுலவியடர வருமதன னூல ளாவியெதிரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொதிந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரிநெறிவு கலகலென வாசம் வீசுகுழலிருளின் முகநிலவு கூர மாணுடையகன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுடலிறுக இறுகியநு ராக போகமிகவளரு மிளகுதன பார மீதினில்முயங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவுமுதிர அரியதமி ழோசை யாகவொளிவசன முடையவழி பாடு சேருமருள்தந்திடாதோ
கலக அசுரர்கிளை மாள மேருகிரிதவிடு படவுதிர வோல வாரியலைகதற வரியரவம் வாய்வி டாபசிதணிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறிபரவு மமரர்குடி யேற நாளும்விளைகடிய கொடியவினை வீழ வேலைவிடவந்தவாழ்வே
அலகை யுடனடம தாடு தாதைசெவிநிறைய மவுனவுரை யாடு நீபஎழில்அடவி தனிலுறையும் வேடர் பேதையைமணந்தகோவே
அமணர் கழுவில்விளை யாட வாதுபடைகருது குமரகுரு நாத நீதியுளதருளு மிடைமருதில் மேவு மாமுனிவர்தம்பிரானே.
