பாடல் 842
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானதன தானதன தானதனதானதன தானதனதனதான
பாடல் வரிகள்
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தனநேயமதி லேதினமுமுழலாமல்
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலைநீரிலுழல் மீனதெனமுயலாமற்
காலனது நாவரவ வாயிலிடு தேரையெனகாயமரு வாவிவிழஅணுகாமுன்
காதலுட னோதுமுடி யார்களுட னாடியொருகால்முருக வேளெனவுமருள்தாராய்
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரிதோகைகுற மாதினுடனுறவாடிச்
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழசோதிகதிர் வேலுருவுமயில்வீரா
கோல வழல் நீறுபுனை யாதிசரு வேசரொடுகூடிவிளை யாடுமுமைதருசேயே
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்கோடிநகர் மேவிவளர்பெருமாளே.
