பாடல் 816
கூசா தேபா ரேசா தேமால்
- தலம்
- திருவர்ருர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
பாடல் வரிகள்
கூசா தேபா ரேசா தேமால்கூறா நூல்கற்றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்கூர்கூ தாளத்தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்வேதா தீதக்கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்வீணே போகத்தகுமோதான்
நேசா வானோ ¡£சா வாமாநீபா கானப்புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்நீள்கார் சூழ்கற்பகசாலத்
தேசா தீனா தீனா ¡£சாசீரா ரூரிற்பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
