உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 813

நடை - தகதகிட

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)

பாடல் வரிகள்

நடை - தகதகிடஎடுப்பு - /4/4/4 0

தந்தான தானதன தானதன தானதனதந்தான தானதன தானதன தானதனதந்தான தானதன தானதன தானதனதனதான

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசையகொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரளவண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ்மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுறவந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமயலிடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெனுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமதுதண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமெனகந்தாகு மாரசிவ தேசிகந மோநமெனசிந்தூர பார்வதிசு தாகரந மோநமெனவிருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமெனகங்காள வேணிகுரு வானவந மோநமனெதிண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடுமுருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொருபெண்காத லோடுவன மேவிவளி நாயகியையின்பான தேனிரச மார்முலைவி டாதகரமணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகுசெங்காடு மேவிபிர காசமயில் மேலழகொடென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →