உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 810

தலைநா ளிற்பத மேத்தி யன்புற

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனனா தத்தன தாத்த தந்தனதனனா தத்தன தாத்த தந்தனதனனா தத்தன தாத்த தந்தனதனதான

பாடல் வரிகள்

தலைநா ளிற்பத மேத்தி யன்புறவுபதே சப்பொரு ளூட்டி மந்திரதவஞா னக்கட லாட்டி யென்றனையருளாலுன்

சதுரா கத்தொடு கூட்டி யண்டர்களறியா முத்தமி ழூட்டி முண்டகதளிர்வே தத்துறை காட்டி மண்டலம்வலமேவும்

கலைசோ திக்கதிர் காட்டி நன்சுடரொளிநா தப்பர மேற்றி முன்சுழிகமழ்வா சற்படி நாட்ட முங்கொளவிதிதாவிக்

கமலா லைப்பதி சேர்த்து முன்பதிவெளியா கப்புக ஏற்றி யன்பொடுகதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல்மறவேனே

சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெடஅவுணோ ரைத்தலை வாட்டி யம்பரசிரமா லைப்புக வேற்ற வுந்தொடுகதிர்வேலா

சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்வரிநா கத்தொடை யார்க்கு கந்தொருசிவஞா னப்பொரு ளூட்டு முண்டகஅழகோனே

மலைமே வித்தினை காக்கு மொண்கிளியமுதா கத்தன வாட்டி யிந்துளமலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன்மணவாளா

வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படிநடமா டிச்சுரர் போற்று தண்பொழில்வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →