பாடல் 803
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
- தலம்
- திலதைப்பதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத் தனன தந்த தனனத் தனன தந்ததனனத் தனன தந்ததனதான
பாடல் வரிகள்
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்றுபாடர்பொற் பணிபு னைந்தமுலைமீதிற்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் களிய கொண்டைபடுபுட் பவன முன்றிலியலாரும்
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்அழகிற் றனித ளர்ந்துமதிமோக
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்பஅலையிற் றிரிவ னென்றுமறிவோனே
தனனத் தனன தந்த தனனத் தனன தந்ததனனத் தனன தந்ததனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்றுதனிமத் தளமு ழங்கவருவோனே
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டிசெறிநற் கழைதி ரண்டுவளமேவித்
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்றதிலதைப் பதிய மர்ந்தபெருமாளே.
