பாடல் 787
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
- தலம்
- திருப்படிக்கரை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தத்தனத் தனத்த தத்தனத்தனத்த தத்தனத்தனதான
பாடல் வரிகள்
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்டழைத்தி தப்தடச்சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்தணைத்தி தழ்க்கொடுத்தநுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்குளக்க ருத்தினற்ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்துனைத்தி ருப்புகழ்ப்பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்றடப்பொ ருப்பெடுத்தணையாகச்
சமுத்திர த்தினைக் குறுக்க டைத்ததிற்றரித்த ரக்கர்பொட்டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்செயித்த வுத்தமத்திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்திருப்ப டிக்கரைப்பெருமாளே.
