பாடல் 785
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
- தலம்
- திருக்கடவூர்
- ராகம்
- பைரவி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி (2 களை)(எடுப்பு - 1/4 இடம்)தாத்த தனத்தன தானன தானனதாத்த தனத்தன தானன தானனதாத்த தனத்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுரவீட்டி லடைத்திசை வேகசை மூணதிலேற்றி யடித்திட வேகட லோடமதெனவேகி
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொளாத்து வெனத்திரி யாபரி யாதவமேற்றி யிருப்பிட மேயறி யாமலுமுடல்பேணிப்
பூட்டு சரப்பளி யேமத னாமெனஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்பூத்த மலக்குகை யோபொதி சோறெனகழுகாகம்
போற்றி நமக்கிரை யாமென வேகொளநாட்டி லொடுக்கென வேவிழு போதினில்பூட்டு பணிப்பத மாமயி லாவருள்புரிவாயே
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதகனாட்டை விடுத்திட வேபல சூதினிலவீழ்த்த விதிப்படி யேகுரு காவலர்வனமேபோய்
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளதுபார்த்து முடித்திட வேயொரு பாரதமேற்புனை வித்தம காவிர மாயவன்மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவெனமூட்டி யெரித்தப ராபர சேகரகோத்த மணிக்கதி ரேநிக ராகியவடிவேலா
கூற்று மரித்திட வேயுதை பார்வதியார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்கோட்டு முலைக்கதி பாகட வூருறைபெருமாளே.
