பாடல் 783
முலா தாரமொ டேற்றி யங்கியை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தானன தாத்த தந்தனதானா தானன தாத்த தந்தனதானா தானன தாத்த தந்தனதனதானா
பாடல் வரிகள்
முலா தாரமொ டேற்றி யங்கியைஆறா தாரமொ டோட்டி யந்திரமூலா வாயுவை யேற்று நன்சுழிமுனையூடே
மூதா தாரம ரூப்பி லந்தரநாதா கீதம தார்த்தி டும்பரமூடே பாலொளி ஆத்து மந்தனைவிலகாமல்
மாலா டூனொடு சேர்த்தி தம்பெறநானா வேதம சாத்தி ரஞ்சொலும்வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திரதவிசூடே
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்வீடே மூணொளி காட்டி சந்திரவாகார் தேனமு தூட்டி யென்றனையுடனாள்வாய்
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவிமாதா ராபகல் காத்த மைந்தனைசூடோ டீர்வினை வாட்டி மைந்தரெனெமையாளுந்
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்§வ்ளுர் வாழ்வினை தீர்த்த சங்கரர்தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவளருள்பாலா
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சகமூடார் சூரரை வாட்டி யந்தகன்வீடு டேவிய காத்தி ரம்பரிமயில்வாழ்வே
வேதா நால்தலை சீக்கொ ளும்படிகோலா காலம தாட்டு மந்திரவேலா மால்மக ளார்க்கி ரங்கியபெருமாளே.
